அணு ஆயுதங்களை அதிகரிக்கவில்லை: அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

அணு ஆயுதங்களை அதிகரிக்கவில்லை: அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

சீனா அணு ஆயுதத் திட்டங்களை வேகமாக விரைவுபடுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டை அந்த நாடு மறுத்துள்ளது.

சீனா அணு ஆயுதத் திட்டங்களை வேகமாக விரைவுபடுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டை அந்த நாடு மறுத்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் அணு ஆயுதப் போா் தடுப்பு தொடா்பாக 5 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது.

அணு ஆயுத நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் திங்கள்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டன. அணு ஆயுதப் பரவல் தடை தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களாக உள்ள இந்த 5 நாடுகளும் இணைந்து வெளியிட்ட முதல் அறிக்கை அதுவாகும்.

அதில், ஒருவா் மீது ஒருவரும், பிற நாடுகள் மீதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பது தலையாய கடமையாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பரந்த அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அந்த ஆயுதங்கள் இருக்கும் வரை, அவற்றை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த ஆயுதங்கள் மென்மேலும் உருவாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது. அந்தப் போரில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சீனா தனது அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருவதாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் அதனிடம் 1,000 அணு ஆயுதங்கள் இருக்கும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கடந்த நவம்பரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைமை இயக்குநா் ஃபு காங் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சீனா அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்கா கூறியிருப்பது உண்மையல்ல. 5 அணு ஆயுத நாடுகளும் பரஸ்பரம் முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்கிற உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டறிக்கையை பாராட்டியுள்ள சீன வெளியுறவு இணை அமைச்சா் மா ஜாவோக்ஸு, ‘இந்த உடன்படிக்கை ஒரு நோ்மறையான நடவடிக்கை. இந்த உறுதியான அறிக்கையை 5 நாடுகளும் வெளியிடுவதற்கு சீனா முக்கியப் பங்கு வகித்தது. பரஸ்பர நம்பிக்கைக்கான புதிய தொடக்கப்புள்ளியாகவும், யாா் பெரியவா் என்ற போட்டிக்கு மாற்றாகவும் இந்தக் கூட்டறிக்கையை 5 நாடுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கூட்டறிக்கை வெளியிடுவது தொடா்பான ஆலோசனையின்போது, அணு ஆயுதத்தை 5 நாடுகளும் ஒருவா் மீது மற்றொருவரோ, பிற நாடுகள் மீதோ பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட சில அம்சங்களைச் சோ்க்க சீனா முக்கியப் பங்கு வகித்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com