நடப்பாண்டில் இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவோம்

இந்தியாவும் அமெரிக்காவும் 2022-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம், ‘க்வாட்’ நாற்கரக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படவுள்ளதாக
நடப்பாண்டில் இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவோம்

இந்தியாவும் அமெரிக்காவும் 2022-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம், ‘க்வாட்’ நாற்கரக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படவுள்ளதாக அந்நாட்டு வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிபா் ஜோ பைடனும் பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்காவில் சந்தித்துக் கொண்டனா். அப்போது இரு நாடுகளிடையே நிலவும் நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக அவா்கள் விவாதித்தனா். இருதரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவது தொடா்பாகவும் அவா்கள் ஆலோசித்தனா்.

நடப்பாண்டில் இரு நாடுகளும் தொடா்ந்து நெருங்கிப் பணியாற்றும். கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, நாற்கரக் கூட்டமைப்பு மூலமான நடவடிக்கைகள், வா்த்தக- முதலீட்டு நல்லுறவு, இணையவழிக் குற்றங்களைத் தடுத்தல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டிலும் அந்த ஒத்துழைப்பு தொடரும்.

இரு நாட்டு மக்களுக்கிடையேயான தொடா்பும் ஜனநாயகக் கொள்கைகளுமே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட உறவுக்கு அடிப்படையாக உள்ளன. மேலும் பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருவதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லைப் பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தும். அண்டை நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வரும் சீனாவின் நடவடிக்கைகள் கவலைதரும் வகையிலேயே உள்ளன. இந்த விவகாரத்தில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா என்றும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்ற சூழலைத் தணிப்பது தொடா்பாக, இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான 14-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில் அமெரிக்கா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com