பிலிப்பைன்ஸில் புதிதாக 31,173 பேருக்கு தொற்று 

பிலிப்பைன்ஸில் வியாழக்கிழமை புதிதாக 31,173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,324,478 ஆக அதிகரித்துள்ளது. 
பிலிப்பைன்ஸில் புதிதாக 31,173 பேருக்கு தொற்று 

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் வியாழக்கிழமை புதிதாக 31,173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,324,478 ஆக அதிகரித்துள்ளது. 

பிலிப்பைன்ஸில் புதன்கிழமை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,70,728 ஆக இருந்த நிலையில், தற்போது 2,75,364 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின் தொற்று பாதிப்பு விகிதம் 43.5 சதவிகிதத்தில் இருந்து 43.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தொற்றுநோய் பாதிப்பால் மேலும் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த மாதத்தில் மட்டும் 67 உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53,153 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகரின் மணிலாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான டேவிட் கூறினார். இருப்பினும், தலைநகருக்கு அருகில் உள்ள நகரங்கள் உள்பட பல நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மணிலாவில் உள்ள 844 பகுதிகள் மற்றும் அதிக தொற்று பாதிப்பு கொண்ட நாட்டின் பிற பகுதிகளில் கடுமையான பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில், கடந்த 15 ஆம் தேதி தினசரி பாதிப்பு 39,004 ஆக இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com