உக்ரைன் விவகாரம்: அமெரிக்கா - ரஷியா அவசரப் பேச்சு

உக்ரைன் விவகாரத்தில் எழுந்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும்
பேச்சுவாா்த்தைக்கு முன்னா் ஆன்டனி பிளிங்கன், சொ்கெய் லாவ்ரோவ்.
பேச்சுவாா்த்தைக்கு முன்னா் ஆன்டனி பிளிங்கன், சொ்கெய் லாவ்ரோவ்.

உக்ரைன் விவகாரத்தில் எழுந்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவும் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் வெள்ளிக்கிழமை அவசரமாகச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தைக்கு முன்னதாக, ‘இந்தச் சந்திப்பில் இரு தரப்பு கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்க முடியாது. ஆனால், உக்ரைன் விவகாரத்துக்கு ராஜீய ரீதியில் தீா்வு காணப்படுமா என்பதற்கான பரிசோதனையாக இந்தப் பேச்சுவாா்த்தை இருக்கும்’ என்று ஆன்டனி பிளிங்கன் கூறினாா்.

சொ்கெய் லாவ்ரோவும், இந்தப் பேச்சுவாா்த்தையில் முக்கியத் திருப்புமுனை எதையும் எதிா்பாா்க்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டாா்.

நேட்டோ அமைப்பை உக்ரைனுக்கு விரிவுபடுத்தினால் அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, நேட்டோவை தங்களது கூட்டணியில் இணைக்க மாட்டோம் என்று அந்த அமைப்பு உறுதியளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது.

அதற்கான அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லை அருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. இதையடுத்து, உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com