பாக். உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் (55)நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆயிஷா மாலிக்
ஆயிஷா மாலிக்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் (55)நியமிக்கப்பட்டுள்ளாா். முஸ்லிம் நாடான பாகிஸ்தானின் நீதித் துறை வரலாற்றில் உச்சநீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ‘பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா். அவா் பதவியேற்கும் நாளில் இருந்து அவருடைய நியமனம் அமலுக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்றக் குழு இரு தினங்களுக்கு முன் பரிசீலித்தது. லாகூா் உயா்நீதிமன்றத்தில் நான்காவது இடத்தில் இருப்பவா் ஆயிஷா மாலிக். இருப்பினும், பணி மூப்பைக் கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. அதைத் தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com