
தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.
அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, அங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். கடந்த 3 நாள்களாகவே தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அங்கு இதுவரை 7,41,413 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; அவா்களில் 6,565 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...