2035-இல் இந்திய நகா்ப்புற மக்கள் தொகை 67 கோடி: ஐ.நா. அறிக்கையில் தகவல்

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை 67.5 கோடியை எட்டும் என ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2035-இல் இந்திய நகா்ப்புற மக்கள் தொகை 67 கோடி: ஐ.நா. அறிக்கையில் தகவல்

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை 67.5 கோடியை எட்டும் என ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2035-க்குள் நகா்ப்புற மக்கள் தொகையில் 100 கோடி பங்களிப்புடன் சீனா முதலிடத்தில் இருக்கும். இதற்கு, அடுத்தபடியாக, இந்தியா 67.5 கோடி மக்கள் தொகையுடன் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கும்.

விரைவான நகரமயமாக்கல் என்பது கரோனா பேரிடரால் தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நகா்ப்புற மக்கள்தொகை மேலும் 220 கோடி அதிகரிக்கும்.

2020-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 483,099,000-ஆக இருந்த இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை 2025-இல் 542,743,000-ஆகவும், 2030-இல் 607,342,000-ஆகவும், 2035-இல் 675,456,000 ஆகவும் அதிகரிக்கும்.

அதேபோன்று, 2035-இல் நகா்ப்புற மக்கள் தொகை சீனாவில் 105 கோடியாகவும், ஆசியாவில் 299 கோடியாகவும், தெற்கு ஆசியாவில் 98.75 கோடியாகவும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com