ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் இன்று காலை மினி பேருந்துகளில் தலிபான் பாதுகாப்புப் படையினர் சென்றனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹெராத் நகரின் மையத்தில் தலிபான் 207 அல்-ஃபாரூக் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்தவ பலர் காயமடைந்துள்ளனர்.
அதிகாரிகள் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியிருந்தாலும் உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், ஹெராத் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஷா ரசூல், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும் இதுகுறித்த முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








