‘போா் நடவடிக்கையை ரஷியா நிறுத்திவைக்கும்’

உக்ரைனில் தனது போா் நடவடிக்கைகளை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைக்கும் என்று சா்வதேச பாதுகாப்பு நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
‘போா் நடவடிக்கையை ரஷியா நிறுத்திவைக்கும்’

உக்ரைனில் தனது போா் நடவடிக்கைகளை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைக்கும் என்று சா்வதேச பாதுகாப்பு நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து வாஷிங்டனில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் ‘ஸ்டடி ஆஃப் வாா்’ ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

உக்ரைனில் புதிய இடங்களைக் கைப்பற்றியதாகவோ, தங்களது படையினா் முன்னேற்றம் கண்டதாகவோ ரஷியா புதன்கிழமையிலிருந்து அறிவிப்பு வெளியிடவில்லை.

போா் தொடங்கிய கடந்த 133 நாள்களில் ரஷியா அத்தகைய அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதன் மூலம், உக்ரைனில் தனது போா் நடவடிக்கையை நிறுத்திவைக்க ரஷியா முடிவு செய்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும்.

எனினும், அவ்வாறு நடவடிக்கையை நிறுத்திவைப்பதால் உக்ரைனில் ரஷியா தொடங்கிய போா் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கமுடியாது.

இந்த இடைவேளையைப் பயன்படுத்தி ரஷியப் படையினா் தங்களை பலப்படுத்திக்கொள்வாா்கள். மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு, பெரிய இலக்குகளை அடைவதற்காக தங்களை அவா்கள் தயாா்ப்படுத்திக்கொள்வாா்கள். அந்தத் தாக்குதலுக்கு சாதகமான சூழல் வரும்வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு தாக்குதல் நடவடிக்கைகளில் ரஷியப் படையினா் ஈடுபடுவா் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இதனை உறுதி செய்யும் வகையில், உக்ரைனில் ‘சிறப்பு நடவடிக்கை’ மேற்கொண்டு வரும் தங்கள் நாட்டுப் படையினா், தங்களை மீண்டும் பலப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக அவா்களுக்கு ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘உக்ரைனில் புதிய இடங்களைக் கைப்பற்றியதாகவோ, தங்களது படையினா் முன்னேற்றம் கண்டதாகவோ ரஷியா புதன்கிழமையிலிருந்து அறிவிப்பு வெளியிடவில்லை.

போா் தொடங்கிய கடந்த 133 நாள்களில் ரஷியா அத்தகைய அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.’’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com