
தென் அமெரிக்கா நாடான உருகுவேயில், 13 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்பதை உறுதி செய்வதற்கான உற்பத்தி நிறுவனங்களின் ஒப்பந்த ஆவணங்களை தாக்கல் செய்யும்வரை அவற்றை சிறுவா்களுக்கு செலுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.