சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியானார்கள். 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:45 am

DIN

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியானார்கள். 

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு இன்று நள்ளிரவு மினிபேருந்தில் வந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு சுட்டனர். இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனையில் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.