
கோத்தபய ராஜபட்ச (கோப்புப்படம்)
கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்த கோத்தபய ராஜபட்ச வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் பதவியை இன்று காலை ராஜிநாமா செய்த கோத்தபய ராஜபட்ச, தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும், இலங்கையை விட்டு வெளியேறிய கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகவும் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. அதிமுக அலுவலகத்தில் நுழைந்த சமூக விரோதிகள்: எடப்பாடி பழனிசாமி
ஆனால், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற தகவலை அவர் உறுதிப்படுத்தவில்லை.
இது குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன கூறியதாவது, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச அரை மணி நேரத்துக்கு முன்பாக இலங்கையை விட்டு வெளியேறினார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இரத்னமாலா விமான தளத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியறி அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகக் கூறினார்.
மக்களின் போரட்டத்தைத் தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச, நாட்டிலிருந்தும் வெளியேறினார்.
இதையும் படிக்க.. அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர்: சசிகலா
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச, மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை விமான படைத்தளத்திலிருந்து கொழும்பை வந்துடைந்துள்ளார். பிறகு, இரத்னமாலை விமானப்படை தளத்திலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறினார். ஆனால், இரத்னமாலையிலிருந்து அவர்கள் எங்குச் செல்வார்கள் என்று தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை என்றும், அவர் அருகில் உள்ள ஒரு நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுவதாகக் குறிப்பிட்டார்.