கோத்தபய தப்பிச் செல்வதற்கு உதவ இந்தியா மறுப்பு?

கோத்தபய ராஜபட்ச தப்பிச் செல்லதற்காக பயன்படுத்திய இலங்கை விமானப்படையின் ஜெட் ஏஎன் 32 விமானத்தை இந்தியாவில் தரையிறக்க இந்தியா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
கோத்தபய தப்பிச் செல்வதற்கு உதவ இந்தியா மறுப்பு?


புதுதில்லி: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது பதவியை புதன்கிழமை(ஜூலை 13) ராஜிநாமா செய்வதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லதற்காக பயன்படுத்திய இலங்கை விமானப்படையின் ஜெட் ஏஎன் 32 விமானத்தை இந்தியாவில் தரையிறக்க இந்தியா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட  கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, மக்கள் கடந்த மாா்ச் மாதம் முதல் தொடா் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்துக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினா். அதிபர் இல்லத்தின் அனைத்து அறைகளில் உள்ள உடமைகளையும் சேதப்படுத்தி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபா் கோத்தபய, தற்போது ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை ஜூலை 13-ஆம் தேதி அதிபா் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். 

கோத்தபய தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் பரிசீலித்து பாதுகாப்பான பயணத்தைத் திட்டமிடுவதற்காகவே அவர் காலக்கெடு கோரியிருக்காலம் என்று தற்போதைய சம்பவம் மூலம் தெரிய வருகிறது. 

அமெரிக்க-இலங்கை இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்த கோத்தபய ராஜபட்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2019 இல் தனது அமெரிக்க குடியுரிமையை ஒப்படைத்ததால், அமெரிக்காவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,  இருப்பினும் அவர் சமீபத்தில் அமெரிக்க தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டதாக தூதரக அதிகாரிகள் மறுத்துள்ளதை அடுத்து, அவர் திங்கள்கிழமை துபைய்க்கு விமானத்தில் செல்ல முயன்றதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், குடியேற்ற அதிகாரிகள் விஐபிகளுக்கான விரைவு பாதையான ‘சில்க் ரூட்’ வழிக்கான வசதியை செய்துதரவில்லை என கூறப்படுகிறது.

அமெரிக்க-இலங்கை இரட்டை கடவுச்சீட்டு வைத்திருக்கும் அவரது சகோதரர் பசிலும், கொழும்பில் இருந்து பட்டுப் பாதை வழியாக துபைய் வழியாக வாஷிங்டனுக்கு தப்பிச் செல்லவதற்காக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தின் விஐபி முனையத்துக்கு வந்துள்ளார். அப்போது விஐபி பகுதி வழியயாக அவரது கடவுச் சீட்டைப் பரிசீலித்து முத்திரை அளிக்க விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் மறுத்தனா். மேலும், அங்கு விமானத்துக்காக காத்திருந்த பிற பயணிகளும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, பசில் நாட்டை விட்டு வெளியேற இயலவில்லை. மேலும் எமிரேட்ஸ் விமானத்திற்கான ஆறு போர்டிங் கார்டுகளை பசில் வைத்திருந்தார்.

இதனால் இலங்கையில் இருந்து அரசியல்வாதிகள் தப்பிச் செல்வது நிறுத்தப்பட்டது.

அவர்களது பாஸ்போர்ட்டுகளில் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கையில் இருந்து கோத்தபய வெளியேறுவதற்கு வசதியாக இந்தியாவின் ஆதரவை கோரியுள்ளார். அவர் இலங்கை விமானப்படையின் ஜெட் ஏஎன் 32 விமானத்தில் அல்லது வர்த்தக விமானத்தில் இந்தியாவில் தரையிறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.  

“இலங்கை விமானப்படை விமானம் தரையிறங்குவதற்கான முன்மொழிவை இந்தியா நிராகரித்தபோது, ​​மற்றொரு ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் வணிக விமானம் மூலம் இறங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானமும் கொச்சி விமான நிலையத்தில் 'தொழில்நுட்ப நிறுத்தம்' காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளது, அந்த விமானத்தில் கோத்தபயவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்திய விசா இல்லாததால் இந்தியாவிடம் இருந்து அனுமதி கோரப்பட்டது. எனினும், இதற்கு இந்தியா மறுத்துவிட்டதாக'' கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோத்தபய எங்கு செல்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் ஏறத் திட்டமிட்டிருந்த விமானம் கொழும்பு-குவைத் விமானத்திற்கானது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையில், ராஜபட்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வெளிநாடுக்கு தப்பிச் செல்வதற்கு, இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ராஜபட்ச குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தவர், தற்போது இந்தியாவின் கவனம் இலங்கையின் பொருளாதார நிலைமையில் உள்ளது என்றும், "இந்தியா மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை," என்று அவர் கூறினார்.

இந்திய தூதரகம் மறுப்பு: இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பசில் ராஜபட்ச இலங்கையில் இருந்து வெளியேற இந்தியா உதவியதாக இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. ஜனநாயக முறையில் அரசியலமைப்பு கட்டமைப்பை மீட்டெடுக்கும் இலங்கை மக்களின் முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com