பிரிட்டன் பிரதமா் பதவிப் போட்டி: 2-ஆம் சுற்றிலும் ரிஷி சுனக் முன்னிலை

கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே வியாழக்கிழமை நடத்தப்பட்ட 2-ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளாா்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக்

பிரிட்டனின் அடுத்த பிரதமைரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே வியாழக்கிழமை நடத்தப்பட்ட 2-ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளாா்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து 101 எம்.பி.க்கள் வாக்களித்தனா்.

இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியா வம்சாவளி எம்.பி. சூவெல்லா பிரேவா்மேன் 27 வாக்குகள் மட்டுமே பெற்று போட்டியிலிருந்து விலக்கப்பட்டாா்.

அதையடுத்து, பிரதமா் பதவிக்கான போட்டியாளா்களின் எண்ணிக்கை 5-ஆக சுருங்கியுள்ளது.

இரண்டாம் சுற்று வாக்குப் பதிவில் ரிஷி சுனக்குக்கு அடுத்தபடியாக 83 வாக்குகள் பெற்று வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளாா். வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் 64 வாக்குகள் பெற்றும் சமூக நலத் துறை அமைச்சா் கெமி பேடனாக் 49 வாக்குகள் பெற்றும் முறையை 3 மற்றும் 4-ஆவது இடங்களில் உள்ளனா்.

32 வாக்குகள் பெற்ற வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவா் டாம் டுகென்தாட்டுக்கு 5-ஆவது இடம் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com