இசையமைப்பாளர் ஆஸ்கர் சாலாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்!

ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆஸ்கர் சாலாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 
இசையமைப்பாளர் ஆஸ்கர் சாலாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்!

கூகுள் நிறுவனம், முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆஸ்கர் சாலாவின் 120 ஆவது பிறந்தநாளில் அவரை கௌரவித்து சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுள்ளது.  

1910 ஆம் ஆண்டு ஜூலை 18ல் ஜெர்மனியின் கிரீஸ் நகரில் பிறந்த சாலா, சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். டிரட்டோனியம் எனப்படும் இசைக்கருவியில் ஒலி தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து மேலும் கற்றுத் தேர்ந்து  கலவை-டிரட்டோனியம் எனப்படும் தனது சொந்த கருவியை உருவாக்கி புதுமையான மின்னணு இசையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஒரே நேரத்தில் பல ஒலிகள் அல்லது குரல்களை இயக்கும் திறன் கொண்ட இதனை, வானொலி மற்றும் திரையுலகில் பயன்படுத்தியுள்ளார். 

அவரது தாய் ஒரு பாடகி, அவரது தந்தை இசைத் திறமை கொண்ட ஒரு கண் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் சாலா, 14 வயதிலேயே இசையமைக்கக் கற்றுக்கொண்டார். சாலா தனது பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1995 ஆம் ஆண்டில், அவர் தனது அசல் கலவை-டிரட்டோனியத்தை ஜெர்மன் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 

குவார்டெட்-ட்ரௌடோனியம், கச்சேரி ட்ரௌடோனியம் மற்றும் வோல்க்ஸ்ட்ராடோனியம் ஆகியவற்றையும் உருவாக்கி மின்னணு இசையில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com