பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்தியது மலேசியா!

மலேசியாவின் கெடா மாநிலத்தில் பெண்களில் திருமண வயது 16 முதல் 18 ஆக உயர்த்தியுள்ளது.
பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்தியது மலேசியா!

கோலாலம்பூர்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் பெண்களில் திருமண வயது 16 முதல் 18 ஆக உயர்த்தியுள்ளது. 

கெடா மாநில முதல்வர் முஹம்மது சனூசி மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருமணம் தொடர்புடைய திருத்த சட்ட மசோதா ஒன்று அவையில் தாக்கல் செய்தார். 

இதன்படி, இஸ்லாம் பெண்கள் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ வயது 16-ல் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்ளும் குறைந்தபட்ச பக்குவம் இந்த வயதில் அடைவார்கள் என்பதற்காக வயது உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும், குறைந்தபட்ச வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்ள அனுமதி கோருபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இஸ்லாமிய நீதிமன்றத்தில் முன் அனுமதியைப் பெற வேண்டும்.

மேலும், நீதிமன்ற அனுமதியின்றி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அபராத தொகையாக 3 ஆயிரம் ரிங்கிட் (சுமார் 673 அமெரிக்க டாலர்கள்) ஆகவும், ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாநில அரசு மசோதா திருத்தத்தை நிறைவேற்றியது. 

இளம்வயதில் திருமணம் என்பது நாட்டில்  ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னையாகவே உள்ளது. குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும். சிறுவயது திருமணத்தால் பல பெண்கள் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்வதோடு, தங்கள் வாய்ப்புகளையும் இழக்கின்றனர் என்று மலேசிய வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். 

கடந்த 2020-ஆம் ஆண்டில் வடக்கு போர்னியா மாநிலமான சரவாக் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 183 வழக்குகள் வயதுக்குட்பட்ட திருமண விண்ணப்பங்கள் இருந்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com