உலகளவில் குரங்கு அம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகார அமைப்பு

உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆப்பிரிக்காவில் இதுவரை 5 இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  
உலகளவில் குரங்கு அம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகார அமைப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆப்பிரிக்காவில் இதுவரை 5 இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் கூறியிருப்பதாவது: 

ஆப்பிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டனம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவி அச்சுறுத்தலை உறுதிப்படுத்தியுள்ளன. 

உலகளவில் இதுவரை சுமார் 14 ஆயிரம் பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் இறன்துள்ளனர். 

மேலும், பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் நோய் பரவுவதைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து உதவியையும் உலக சுகாதார அமைப்பு  செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

"நாளை, சமீபத்திய தொற்று தரவை மதிப்பாய்வு செய்ய சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசரக் குழு மீண்டும் கூடுகிறது, மேலும் வெடிப்பு சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையாக உள்ளதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று டெட்ரோஸ் கூறினார்.

உலகளாவிய தொற்று பரவல் மற்றும் நோயறிதல் தற்போது சமமாக இல்லாததால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு செயல்படும் என்று  உறுதியளித்தார்.

இந்தியா தனது முதல் குரங்கு அம்மை நோயை உறுதிசெய்த பின்னர், நாட்டில் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சர்வதேச பயணிகளுக்கு ஏற்ப நோயை நிர்வகிப்பதற்கான தொடர் வழிகாட்டுதல்களை மையம் வெளியிட்டது. அதன் ஆலோசனையில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பயணிகளை விழிப்புடன் இருக்கவும், அறிகுறிகள் தென்பட்டால் உதவியை நாடவும் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com