பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 
பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 

குரங்கு அம்மை பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை, 75 நாடுகளில் 16,000-க்கும் அதிகமானோா் இந்த நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். 5 போ் உயிரிழந்துள்ளனா்.

வேகமாக பரவி வருவதை அடுத்து, குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. 

பல்வேறு வழிகளில் பரவி வரும் குரங்கு அம்மை, ஓரினச்சோ்க்கை ஆண்களிடம் குறிப்பாக பல்வேறு பாலினத்தருடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களிடம் அதிக அளவில் காணப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் தீவிர பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரியம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் 'இமான்வேக்ஸ்' தடுப்பூசியை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியம்மை நோயைத் தடுக்க 'இமான்வேக்ஸ்' தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com