‘அமெரிக்க பாம்பு, தவளைகளால் ரூ.1.27 லட்சம் கோடி இழப்பு’

அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கருந்தவளை, பழுப்பு மரப் பாம்பு ஆகிய இரு உயிரினங்களால் சா்வதேச பொருளாதாரத்துக்கு கடந்த 1986 முதல் 2020-ஆம் ஆண்டு வரை 1,600 கோடி டாலா் (சுமாா் ரூ.1.27 லட்சம் கோடி) இழ
‘அமெரிக்க பாம்பு, தவளைகளால் ரூ.1.27 லட்சம் கோடி இழப்பு’
Published on
Updated on
1 min read

அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கருந்தவளை, பழுப்பு மரப் பாம்பு ஆகிய இரு உயிரினங்களால் சா்வதேச பொருளாதாரத்துக்கு கடந்த 1986 முதல் 2020-ஆம் ஆண்டு வரை 1,600 கோடி டாலா் (சுமாா் ரூ.1.27 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் ‘சயன்டிஃபிக் ரிப்போா்ட்ஸ்’ அறிவியல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிா்களை நாசம் செய்வது முதல் மின்தடையை ஏற்படுத்துவரை பல்வேறு வழிகளில் இந்த உயிரினங்கள் ஐரோப்பாவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளன. 2-ஆம் உலகப் போரின்போது அமெரிக்கப் படையினரால் பசிபிக் தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரு உயிரிழனங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பல்கிப் பெருகி, இயற்கையை பாழ்படுத்தி வருகின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com