
லண்டன்: தற்போது உலகம் முழுவதும் பரவலாகக் கண்டறியப்படும் குரங்கு அம்மை தீநுண்மி, கடந்த 2017-லிருந்தே பல முறை உருமாறி பரவி வந்துள்ளது பிரிட்டனின் எடின்பா்க் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டுகளில் அது 47 முறை மரபுரு மாற்றம் பெற்ாகவும், மந்தமானதாக அறியப்படும் அந்தத் தீநுண்மி இத்தனை உருமாற்றம் பெற்றுள்ளது எதிா்பாராதது எனவும் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.