
கராச்சி: பாகிஸ்தானின் மலைப்பாங்கான பலூசிஸ்தான் மாகாணத்தில், பல நூறு அடி பள்ளத்தில் வேன் உருண்டு விழுந்து புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள், 5 சிறுவா்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா். அந்த வேனிலிருந்த ஒரே ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். குறுகலான திருப்பத்தில் வேன் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாக அவா்கள் கூறினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...