உணவுப் பொருள்கள், உரம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு:பன்னாட்டு நிதியம் கவலை

உணவுப் பொருள்கள் மற்றும் உரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு சில நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கவலை தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள்கள் மற்றும் உரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு சில நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கவலை தெரிவித்துள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்தியா விலக்கிக் கொண்டதற்கு அந்த அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் பன்னாட்டு நிதியத்தின் செய்தித் தொடா்பாளா் கொ்ரி ரைஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

உக்ரைனில் போா் தொடங்கியதில் இருந்து உணவுப் பொருள்கள், உரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு 30 நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிப்பதால் சா்வதேச சந்தையில் உணவுப் பொருள்களின் விலை உயரும்; சந்தையிலும் அவற்றின் இருப்பு நிலையற்ாக இருக்கும். இது, எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. இதற்கு எதிராக ஐஎம்எஃப் இயக்குநா் கிறிஸ்டலினா ஜாா்ஜியேவா, துணை மேலாண் இயக்குநா் கீதா கோபிநாத் ஆகியோா் குரல் கொடுத்துள்ளனா்.

இந்தியாவைப் பொருத்தவரை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை அந்நாடு அண்மையில் விலக்கிக் கொண்டது. ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்த கோதுமையை இந்தியா மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது. இதுதவிர தேவைப்படும் நாடுகளுக்கும் கோதுமை ஏற்றுமதியை இந்தியா தொடங்கியுள்ளது.

உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தளா்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா மட்டுமன்றி பிற நாடுகளும் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com