
வெனிசுலாவில் அதன் விலை 60 ஆயிரமாம்: ஏன் என்றால்?
பல நாடுகளில் அரசுகளே, பொதுமக்களுக்கு அதனை இலவசமாகக் கொடுக்கிறது. ஆனால், வெனிசுலாவில் மட்டும் அதன் விலை ரூ.60 ஆயிரம் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
சில நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் காண்டம் எனப்படும் ஆணுறை அரசுகளால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. குழந்தைப்பேறு தொடர்பாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டம் உள்ளது.
ஆனால், இதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, வெனிசுலா நாட்டில், ஒரு ஆணுறை பாக்கெட்டின் விலை ரூ.60 ஆயிரத்தைத் தொட்டது. உலக அளவில் இது பரபரப்பாகவும் பேசப்படுகிறது.
இதையும் படிக்க.. திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?
காரணம்?
ஒரு விலையுயர்ந்த தொலைக்காட்சியையே 60 ஆயிரத்துக்குள் வாங்கிவிடலாம் என்ற நிலையில், ஒரு காண்டம் பாக்கெட் இப்படி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றால், அது பேசுபொருளாகாதா என்ன? ஆம் உலகம் முழுவதும் தற்போது இதைப் பற்றிய செய்திகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது.
காரணம்.. வெனிசுலாவில் கருக்கலைப்புக்கு அரசு தடை விதித்துள்ளது. ஒரு வேளை யாராவது கருக்கலைப்பு செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள் தொகை அறிக்கை 2015-ன் கூற்றின்படி வெனிசுலா நாட்டில்தான் அதிகப்படியான இளம்பருவத்தினர் கருவுற்றல் அதிகமாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே இளம் தாய்மார்கள் பட்டியலில் வெனிசுலாதான் முன்னிலையில் உள்ளது.
இதுபோன்ற ஒரு நாட்டில் தான், காண்டம் எனப்படும் ஆணுறையின் விலை இப்படி 60 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. ஆனாலும், ஏன் ஆணுறையின் விலை இப்படி உயர்ந்தது என்பதற்கு எந்தக் காரணமும் கண்டறியப்படவில்லை. ஆனால், இது பற்றிய செய்திகள் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம், இளம்பெண்கள் கருவுற்றல் அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில், கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்று சட்டம் இருக்கும் நிலையில், ஒரு ஆணுறை பாக்கெட்டின் விலை இப்படி விண்ணைமுட்டும் நிலையில் இருந்தால் அந்நாட்டு மக்கள் என்னதான் செய்வார்கள் என்று சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதற்கு வெனிசுலா அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...