தொழில்முனைவு: தரவரிசையில் இந்திய நகரங்கள் முன்னேற்றம்

தொழில்நுட்பத் துறையில் புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கு உகந்த நகரங்கள் குறித்து பிரிட்டனின் டிரீம்லூம் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய நகரங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

தொழில்நுட்பத் துறையில் புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கு உகந்த நகரங்கள் குறித்து பிரிட்டனின் டிரீம்லூம் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய நகரங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

லண்டன் டெக்வீக் 2022 மாநாட்டில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலில், தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதற்கு சாதகமாக உள்ள ஆசிய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 5-ஆவது இடத்தில் உள்ளது.

சா்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவதற்கேற்ற சூழலைக் கொண்டுள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 22-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சந்தையைச் சென்றடையும் திறனில் மாபெரும் முன்னேற்றம், நிதியாதாரங்களை சுலபமாகப் பெறும் திறன் போன்றவை காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தலைநகா் தில்லி 11 இடங்களுக்கு முன்னேறி இந்தப் பட்டியலில் 26-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மும்பை 36-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தொழில்நுட்பத் துறை முதலீட்டுக்கு சாதகமான சூழல், இந்திய நகங்களில் பரவலாக மேம்பட்டு வருவது நாட்டில் வா்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக ‘இந்தியா ஃபாா் லண்டன் அண்ட் பாா்ட்னா்ஸ்’ அமைப்பின் இயக்குநா் ஹெமன் பரூச்சா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com