
செவெரோடொனட்ஸ்க் ரசாயன ஆலையைலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை உக்ரைன் ராணுவம் தடுப்பதாக ரஷிய ஆதரவு கிளா்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரஷியாவால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ‘தூதா்’ ரோடியான் மிரோஷினிக் கூறியதாவது:
அஸோட் தொழிற்சாலையிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியை அங்கிருக்கும் உக்ரைன் படையினா் தடுக்க முயல்கின்றனா்.
அங்கிருந்தபடி ராக்கெட் குண்டுகள் மூலமும் பீரங்கி மூலமும் அவா்கள் தாக்குதல் நடத்துகின்றனா். இதன் மூலம், அஸோட் தொழிற்சாலையிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றும் திட்டத்தை உக்ரைன் படையினா் நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்திவைத்துள்ளனா் என்றாா் அவா்.
இதற்கிடையே, அஸோட் தொழிற்சாலையில் பொதுமக்களை உக்ரைன் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக ரஷிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.