ஆப்கனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 255 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

பத்திகா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதில் இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பத்திகா மாகாணத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்களில் அப்பகுதியிலிருந்து விமானம் மூலம் கொண்டு செல்கின்றனர். 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் சமூக ஊடகங்களில் வரலாகப் பரவி வருகின்றது. 

மேலும், பேரழிவைத் தடுக்க உடனடியாக குழுக்களை அனுப்புமாறு அனைத்து உதவி நிறுவனங்களையும் மாகாண அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com