ஆப்கன் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது என்று ஆப்கனின் தலிபான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. 
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது என்று ஆப்கனின் தலிபான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. 

இந்த வார தொடக்கத்தில் பக்திகா மாகாணத்தைத் தாக்கிய 6.1 அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆகவும், அதே நேரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஆகவும் உயர்ந்துள்ளது. 

பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 

காயமடைந்தவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மேலும் சிலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளது. 

கயான் மற்றும் பர்மால் மாவட்டங்களைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் பக்திகாவின் குடியிருப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

கோஸ்ட் நகரத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரையிலும் உணரப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுக்கு உணவு, தங்குமிடம், கூடாரங்கள் தேவை என்று மனிதாபிமான அமைப்புகள் மற்றும் தலிபான் அரசு உடனடி உதவிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com