உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற இந்திய தூதரகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகிறது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்கி வருகின்றனர்.
இதையும் படிக்க | கெர்சன் நகரைக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு!
கார்கிவ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில் அங்குள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
அதில், கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்குள்(இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) கண்டிப்பாக வெளியேறி பெசோசின், பாஃபாயி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல உத்தரவிடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

ஜம்மு-காஷ்மீா் என்கவுன்ட்டா் விவகாரம்: நீதிபதி விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


