உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடக்கம்: போர் முடிவுக்கு ரஷியா எதிர்பார்ப்பு

​உக்ரைன் மக்கள் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடக்கம்: போர் முடிவுக்கு ரஷியா எதிர்பார்ப்பு


உக்ரைன் மக்கள் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 8-வது நாளாக தீவிர ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையொட்டி பெலாரஸ் நாட்டில் இருநாட்டுப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. உக்ரைன் பிரதிநிதிகள் ஹெலிகாப்டர் மூலம் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.

இதுபற்றி ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

"ரஷியா, உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் மக்கள் அனைவரும் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் உக்ரைன் வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறோம்."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com