பிரான்ஸ் நாட்டினர் ரஷியாவை விட்டு வெளியேற அறிவுறுத்தல்

பிரான்ஸ் நாட்டு மக்கள் ரஷியாவை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. 
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் நாட்டு மக்கள் ரஷியாவை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு வாரத்தை எட்டியுள்ளது. ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகள் சிதறியுள்ளன. எனினும் ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்தவரை பதிலடி கொடுத்து வருகிறது. 

தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷிய ராணுவம் முன்னேறி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி வழங்கி ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. 

அதேபோன்று ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்து வருகின்றன. அந்தவகையில் பிரான்சும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 

இந்நிலையில், தங்கள் நாட்டு மக்கள் ரஷியாவை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

ரஷியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையிலான வான்வெளிப் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவசியமில்லை எனில் ரஷியாவை விட்டு வெளியேறுங்கள் என பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com