நாட்டிலேயே முதல் முறையாக, சாலையோரம் அமைந்திருந்த வழிபாட்டுத் தலம், ரயில்வே தண்டவாளத்திலிருந்து சற்று நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் தேவாரா பகுதியில் அமைந்திருந்த செயின்ட் ஜான்ஸ் நெபுமியன் தேவாலயம், சாலையோரத்திலிருந்து தூக்கி நகர்த்தும் முறையைப் பயன்படுத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பாதையை விரிவாக்கம் செய்யும் பணியின்போது, அங்கே இருந்த 200 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலத்தை என்ன செய்வது என்ற யோசனை வந்தது.
மக்களின் இத்தனை ஆண்டு கால வழிபாட்டுத் தலம் மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் பொறியாளர்கள் தங்களது திட்டங்களுடன் முன் வந்தனர்.
அதன்படி, வழிபாட்டுத் தலத்தை பூமியிலிருந்து அஸ்திவாரத்தோடு பத்திரமாகத் தோண்டி எடுத்து, மெல்ல நகர்த்தி பத்திரமான ஓரிடத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
செயின்ட் ஜான்ஸ் சாலையின் முடிவில், கால்வாய்க்கு அருகே அமைதியாக 15 அடி உயரமுள்ள இந்தக் குரிஷாதி அமைதியாக நின்றுகொண்டிருந்தது. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏராளமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் இடமாக இருந்து வந்தது. இது அந்தக் கடற்கரை கிராமத்தின் வரலாறு, செயின்ட் ஜான்ஸ் நெபுமியன் தேவாலயத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது.
தற்போது, தேவாலயம் இடிக்கப்படுவதைக் காட்டிலும் ஒரு தனித்துவமான நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக வேறொரு இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டுத் தலத்தை 26 மீட்டர் தள்ளி, தேவாயலத்துக்குச் சொந்தமான நிலத்திற்கு பத்திரமாகக் கொண்டு வரப்படுகிறது. இந்தக் குரிஷாதி (வழிபாட்டுத் தலம்) அதன் வகையிலான தனித்துவமான கட்டமைப்புகளில் ஒன்றாகும்; இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசிய கட்டட பாணியில் கட்டப்பட்டுள்ளது.
எனக்கு நினைவிருக்கும் வரையில், மாநிலத்தின் இந்தப் பகுதியில் இதுபோன்ற தேவாலயங்கள் மிகக் குறைவாகவே உள்ளன; நாரக்கல் மற்றும் எடக்காட்டுவயலில் தலா ஒன்று உள்ளது. ஒரு காலத்தில் தேவாலயத்திற்குச் சொந்தமான நிலம் தற்போது ரயில்வேயால் மேம்பாட்டுப் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதால், இப்பகுதியின் வரலாற்றையும் இப்பகுதி மக்களின் நம்பிக்கைகளையும் பாதுகாக்கும் வகையில், இந்த பாரம்பரிய ஆலயத்தை இடமாற்றம் செய்ய தேவாலயம் முடிவு செய்தது என்று தேவாலயத்தின் பொருளாளர் பி. சி. ஆண்டனி கூறினார்.
- மணீஷா விசிஎஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குல்வீர் சிங் மீண்டும் அசத்தல்... காமன்வெல்த் 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!

நீலகிரி, கோவைக்கு நாளை கனமழை எச்சரிக்கை!

இரு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

1000 ஆண்டு பழமையான பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



