சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா!

தஞ்சாவூரில் நடைபெற்ற 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா குறித்து...

News image

பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா! - படம்: DNS

Updated On :31 மார்ச் 2026, 1:20 pm IST

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி வீதியுலா இன்று(மார்ச் 31) நடைபெற்றது.

வீதிகளில் உலா வந்த பச்சைக்காளி பவளக்காளியை ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த விழா, இந்தாண்டு கடந்த 9 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான காளி புறப்பாடு, இன்று அதிகாலை நடைபெற்றது. வெவ்வேறு ஆலயங்களில் இருந்து பச்சைக்காளி - பவளக்காளி புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

வீதிகளில் உலா வந்த காளியைப் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பச்சைக்காளி - பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நாளை(மார்ச் 31) நள்ளிரவு நடைபெறுகிறது.

Summary

The street procession of the 600-year-old Pachaikali and Pavalakkali took place today (March 31) in Thanjavur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.