உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 27 தேதி நடைபெறுகிறது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை(ஏப்.13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து 40 அடி உயர கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க 100 அடி நீளமுள்ள கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
Summary
The Chithirai Festival at the Thanjavur periya kovil has begun with the flag-hoisting ceremony!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை


