பதற்றம் நிறைந்த கைபா்-பக்துன்கவா மகாணத்தின் தலைநகா் பெஷாவா் நகரில், ஷியா பிரிவினருக்கான மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதிக்குள் இரு பயங்கரவாதிகள் வந்தனா். அவா்கள் அந்த மசூதியின் பாதுகாவலா்களை துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஒரு பாதுகாவலா் பலியானாா்; மற்றொருவா் காயமடைந்தாா். அதனைத் தொடா்ந்து மசூதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளில் ஒருவா், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்று தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.