திருப்பூர் நகை அடகுக் கடையில் 3 கிலோ தங்கம் திருட்டு வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 போ் கைது

திருப்பூர் பகுதியில் நகைக்கடையில் 3 கிலா தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கைதான 4 பேர்.
கைதான 4 பேர்.

திருப்பூர் பகுதியில் நகைக்கடையில் 3 கிலா தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகை அடகுக்கடை இருந்து வருகிறது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நகைக்கடை நடத்தி வரக் கூடிய சூழ்நிலையில் கடைக்கு பின்புறமாக வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு பகுதியில் குடியேறிய நிலையில் பின்புறம் உள்ள வீடு காலியாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி, வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டு, அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. 

உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடை உரிமையாளர் ஜெயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடையில் இருந்த மூன்று கிலோ 300 கிராம் தங்கம் 27 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடவயியல் நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு சம்பவ இடத்திற்கு நேரில் வந்து  விசாரணையை தீவிரப்படுத்தினார். 

கொள்ளையடித்தவர்களின் சிசிடிவி., காட்சி மூலம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் கொள்ளையர்கள் 4 பேர் கொள்ளையடித்த பொருட்களையும் பணத்தையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு, திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறி தப்பிச் செல்வதை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் உறுதி செய்தனர். உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. திருப்பூரில் இருந்து அதிகாலையில் சென்னை சென்ற அந்த கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமையன்று மைசூரிலிருந்து சென்னை வழியாக திரிபுராவுக்கு கிளம்பி செல்லும் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிச்செல்வதை உறுதி செய்தனர். 

இந்த தகவல் மேற்கு வங்க மாநில ரயில்வே பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் நவீன் பிரதாப் சிங் தலைமையிலான போலீசார் பல்லார்ஷா பிகாருக்கு செல்லும் வழியில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்லார்ஷா ரயில் நிலையத்தில் வைத்து ரயிலில் சோதனையிட்டனர். இதில் கொள்ளையர்கள் 4 பேரும் கொள்ளையடித்த தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை மூட்டையாக கட்டி வைத்துக் கொண்டு ஹாயாக அமர்ந்திருந்தனர். அவர்களை அலேக்காக தூக்கிய போலீசார் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டார்கள். 

இதில் பீகார் மாநிலம் அராரியா, பாக்டஹாரா எனும் பகுதியை சேர்ந்த மஹ்தாப் அலாம் (37), பத்ருல் (20) முகமது சுப்ஹான் (30), திலாகாஸ் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில்  2 கோடியே 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது. இவற்றை திருப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com