உக்ரைனில் போர் தொடங்கி 2 வாரங்கள்: எப்படி இருக்கின்றன ரஷிய படைகள்?

ரஷிய படையெடுப்புத் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ரஷிய படைகளின் தாக்குதல் வேகம் குறைந்திருந்தாலும் முற்றிலும் படையெடுப்பு நிறுத்தப்படவில்லை.
உக்ரைனில் போர் தொடங்கி 2 வாரங்கள்: எப்படி இருக்கின்றன ரஷிய படைகள்?
உக்ரைனில் போர் தொடங்கி 2 வாரங்கள்: எப்படி இருக்கின்றன ரஷிய படைகள்?


நேட்டோவுடன் இணைவதாக அறிவித்த உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷியா. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புத் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ரஷிய படைகளின் தாக்குதல் வேகம் குறைந்திருந்தாலும் முற்றிலும் படையெடுப்பு நிறுத்தப்படவில்லை.

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா தொடங்கும்போது ஒரு சில நாள்களிலேயே பெரிய அளவில் தாக்குதலை நடத்தி முடித்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால், இரண்டு வார நிறைவில் சாதித்தது குறைவுதான்.. இழந்ததே அதிகம் என்கின்றன கள நிலவரங்கள்.

அதேவேளையில், உக்ரைனில் குவிக்கப்பட்டிருக்கும் 1,50,000 படைகள், தொடர்ந்து முன்னேறி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இருக்கின்றன.

ரஷியாவின் முக்கிய நோக்கம், கீவ் நகரைக் கைப்பற்றி, அரசைக் கவிழ்த்து, அங்கு தங்களுடன் நட்பு பாராட்டும் அரசை அமைப்பது என்பதே. ஆனால், அது தற்போது வரை கைகூடாததற்கு, ரஷிய படைகள் குவிக்கப்பட்டிருந்தாலும் விமானப் படைக்கும், ராணுவத்துக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், உக்ரைன் மீதான தாக்குத ரஷியாவால் திட்டமிட்டதுபோல செய்யமுடியாமல் போகக் காரணமாக அமைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com