ரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தக்கூடும்: நேட்டோ

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தக்கூடும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்
நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தக்கூடும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியாவின் முப்படைகளும் கடந்த 20 நாள்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும், மிகப் பெரிய அணு நிலையங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த நேட்டோ பொதுச் செயலாளர் கூறியதாவது:

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தக்கூடும். ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கான விலையை ரஷியா தரவேண்டியது இருக்கும்.

ரஷியாவுக்கு பிற நாடுகள் ஆயுதங்கள் அல்லது பிற வழிகளில் உதவும் பட்சத்தில் உக்ரைன் மீதான கொடூர போரை தொடர வழிவகுக்கும். இந்த போர் மரணம், துன்பம் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது.

சர்வதேச சட்டத்தை நிலைநாட்ட சீனா கடமைப்பட்டுள்ளது. நாங்கள் சீனாவை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். உலகின் மற்ற நாடுகளுடன் சீனா சேர வேண்டும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்பைக் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com