ஆப்கன்: தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 180 ஊடகங்கள் மூடல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இதுவரை 180 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்கள் (கோப்புப் படம்)
தலிபான்கள் (கோப்புப் படம்)

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இதுவரை 180 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தேசிய பத்திரிகையாளர் மன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மொத்தமுள்ள 475 ஊடகங்களில் 290 மட்டுமே செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும், ஆர்.எஸ்.எஃப். மற்றும் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஆப்கானில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 43 சதவீத ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 60 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தேசிய ஊடகவியலாளர் சங்கத் தலைவர் சயீத் யாசீன் மதின் கூறுகையில், ஊடகங்கள் பெருமளவில் மூடப்படுவதற்கு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தப்பட்டது தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளாக ஆப்கனில் பாதுகாப்பு அளித்து வந்த நேட்டோ படைகள் பின் வாங்கியதை தொடர்ந்து கடந்தாண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினாலும், பழமைவாதம், பெண்கள் மீது தாக்குதல், சட்டத்திற்கு மீறி தண்டனை அளிப்பது போன்ற மனிதாபிமானச் செயல்கள் தொடர்ந்து வருவதால், அந்நாட்டிற்கான பெருமளவிலான சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com