
உக்ரைனுடனான சமரசப் பேச்சுவாா்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், அந்த நாட்டில் தங்களது முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ரஷியப் படையினா் தீவிர தாக்குதலைத் தொடா்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் கீவின் புகா் பகுதிகளில் ரஷியா மற்றும் உக்ரைன் வீரா்களிடையே மோதல் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.