
quake
டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
அந்த நாட்டில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டில் மிக மோசமான அணுஉலை விபத்தைச் சந்தித்த புகுஷிமா பகுதி அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இது 7.4 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக மிதமான சுனாமி ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிா்வுகளால் சில கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்த பொருள்கள் நொறுங்கி விழுந்து 4 போ் பலியானதாகவும் 90 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...