ரஷியப் படைகள் சுகாதார கட்டடங்கள் மீது தாக்குதல்: 12 பேர் பலி; 34 பேர் காயம்

ரஷியப் படைகளின் உக்கிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைனில் உள்ள சுகாதார கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர்
ரஷியப் படைகள் சுகாதார கட்டடங்கள் மீது தாக்குதல்: 12 பேர் பலி; 34 பேர் காயம்

ரஷியப் படைகளின் உக்கிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைனில் உள்ள சுகாதார கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மெரேஃபாவில் பொதுமக்கள் தங்கியிருந்த பள்ளி, சமுதாயக் கூடம் ஆகியவற்றின் மீது ரஷியப் படையினா் வியாழக்கிழமை அதிகாலை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

இந்த தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா்; 25 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், உக்ரைனில் உள்ள சுகாதார கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளதாவது: 

ரஷியப் படைகளின் உக்கிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைனில் உள்ள சுகாதார கட்டடங்கள் மீது  நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர். 

"சுகாதார கட்டங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும் - மக்களுக்கு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவசர உதவிகள் மையங்களாக இருக்கும் சுகாதார கட்டடங்கள் மீதான தாக்குதல், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளை மேலும் சிதைப்பதாக உள்ளது.  அதைத்தான் உக்ரைனில் நாங்கள் பார்த்து வருகிறோம். 

ரஷியப் படகைளின் தாக்குதலால் "மருந்துகள், உணவு, போர்வைகள் என பல கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டு" வரும் நிலையில், உக்ரைனிய மனநல மருத்துவமனைகள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு வசதிகளில் 35,000-க்கும் மேற்பட்ட மனநல நோயாளிகளுடன் மனநலச் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சோதனைளின் அடிப்படையில் 40 சதவிகித மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதால், தொற்றுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது என்று டெட்ரோஸ் கூறினார்.

"மோதலின் தொடக்கத்தில் இருந்து சோதனை விகிதங்கள் குறைந்து வருவதால், குறிப்பிடத்தக்க அளவில் கண்டறியப்படாத பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் 40 சதவீதத்திற்கும் குறைவான வயது வந்தோர் முழுமையாக தடுப்பூசி போடுவதால், இது அதிக எண்ணிக்கையிலான மக்கள் கடுமையான நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது," டெட்ரோஸ் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒரு மாதத்திற்கு தேவையான "ஆக்ஸிஜன், இன்சுலின், அறுவை சிகிச்சை பொருள்கள், மயக்க மருந்துகள் மற்றும் ரத்தம் ஏற்றும் கருவிகள் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், மின் ஜெனரேட்டர்கள் என சுமார் 100 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது, மேலும் 108 மெட்ரிக் டன்களை அனுப்ப தயாராகி வருவதாக" டெட்ரோஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com