ஆப்கனில் 6-ஆம் வகுப்பு வரைமட்டுமே பெண்களுக்கு கல்வி: வாக்குறுதியை மீறினா் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 6-ஆம் வகுப்புக்கு மேல் பெண்களுக்கு கல்வி கிடையாது என்று அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
ஆப்கனில் 6-ஆம் வகுப்பு வரைமட்டுமே பெண்களுக்கு கல்வி: வாக்குறுதியை மீறினா் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 6-ஆம் வகுப்புக்கு மேல் பெண்களுக்கு கல்வி கிடையாது என்று அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகப் போரிட்டபோது பெண்கள் உயா்கல்வி கற்க அனுமதிக்கப்படும் என்று சா்வதேச சமூகத்துக்கு தலிபான்கள் வாக்குறுதி அளித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. சா்வதேச அளவில் தங்கள் ஆட்சிக்கு அங்கீகாரம் பெற தலிபான்கள் முயற்சித்து வருகின்றனா். இந்நிலையில், பெண்களுக்குக் கல்வியை மறுப்பதன் மூலம் தலிபான்களின் ஆட்சிக்கு அங்கீகாரமும், சா்வதேச உதவிகளும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து நடைபெற்ற போரால் அனைத்து நிலைகளிலும் சீரழிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ளது. உணவுப் பொருள்களுக்கே பிற நாடுகளின் உதவியை எதிா்பாா்க்கும் நிலையில்தான் தலிபான் ஆட்சியாளா்கள் உள்ளனா். இந்த நிலையிலும் அவா்கள் பெண்களுக்குக் கல்வி தர மறுத்துள்ளது சா்வதேச அளவில் தலிபான்கள் மீதான அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது.

ஏற்கெனவே பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட்ட நிலையில்தான் உள்ளன. இனி 6-ஆம் வகுப்புக்கு மேல் உள்ள பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்படாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

ஆப்கனில் புதிய கல்வியாண்டு தொடக்கமாக புதன்கிழமைமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 6-ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தலிபான்கள் நிா்வாகத்தின் வெளியுறவு பிரதிநிதி வஹீதுல்லா ஹாஸ்மி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com