நேட்டோ மாநாட்டில் தனித்துவிடப்பட்டாரா போரிஸ் ஜான்சன்? நடந்தது என்ன?

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து விவாதிக்க நேட்டோவின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.
போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டில் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மட்டும் தனியாக நிற்பது போன்ற விடியோ வெளியாகி கேலிக்கு உள்ளாகியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்வது போன்றும் போரிஸ் ஜான்சன் மட்டும் தனியாக நிற்பது போல அந்த விடியோவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மாநாட்டிற்கு வரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மற்ற தலைவர்களுடன் கைகுலுக்கு கொண்டே மகிழ்ச்சியாக பேசுகிறார்.

அருகிலேயே, போரிஸ் நின்று கொண்டிருந்த போதிலும், அவரை தவிர்த்து விட்டு மற்ற தலைவர்களுடன் கைகுலுக்குவது போலும் பதிவாகியுள்ளது. மேக்ரானுடன் கைகுலுக்குவதற்காக ஜான்சன் சிறிது நேரம் நின்று கொண்டிருப்பது போலும் அந்த விடியோவில் தெரிகிறது.

ஆனால், மாநாட்டின் முழு விடியோ வெளியான பின்னர்தான், உண்மை என்னவென்று தெரியுவந்துள்ளது. வெளியான இரண்டாவது விடியோவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் போரிஸ் ஜான்சன் பேசி கொள்வது போன்றும் கைகுலுக்கி கொள்வது போன்றும் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கேலியாக பதிவிட்ட ட்விட்டர் பயனாளி ஒருவர், "மிஸ்டர் லோன்லி" எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், போரிஸ் ஜான்சனும் இமானுவேல் மேக்ரானும் ஒருவர் குறித்து மற்றொரு தெரிவித்த கருத்தின் காரணமாகவே இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய ஆகிய நாடுகள் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் காரணமாக, பிரான்ஸ் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்ததை பிரிட்டன் ரத்து செய்தது.

இது இரு நாடுகளுக்கிடையே வார்த்தை போர் வெடிக்க காரணமாக மாறியது. அப்போது, கட்டுப்பாடுடன் இருக்கும்படி மேக்ரானுடன் போரிஸ் கூறினார். இதையடுத்து, சந்தித்திப்பின்போது ஜான்சனை மேக்ரான் ஜோக்கர் என விமரிசித்ததாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com