2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

எரிபொருள் பற்றாக்குறை: இலங்கையில் இன்று முதல் 10 மணி நேர மின் வெட்டு

சுழற்சி முறையில் இன்று முதல் 10 மணி நேரம் மின் வெட்டு செய்ய சிலோன் மின் வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

News image

எரிபொருள் பற்றாக்குறை: இலங்கையில் இன்று முதல் 10 மணி நேர மின் வெட்டு

Updated On :30 மார்ச் 2022, 1:02 pm IST

பொருளாதார நெருக்கடி காரணமாக, சுழற்சி முறையில் இன்று முதல் 10 மணி நேரம் மின் வெட்டு செய்ய சிலோன் மின் வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போதிய ஜெனரேட்டர்கள் இல்லாததால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக, புதன் மற்றும் வியாழக்கிழமையன்று 10 மணி நேரம் மின் வெட்டு இருக்கும் என்றும் சிலோன் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று மட்டும் 10 மணி நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், அது மேலும் ஒரு நாளுக்கு தொடரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து இலங்கை பொது பயன்பாட்டு ஆணைய நிர்வாகி ஜனக ரத்னநாயகே இது குறித்து பேசுகையில், சிலோன் மின் வாரியம், இன்று 12 மணி நேர மின் வெட்டுக்கு அனுமதி கோரியது. ஆனால், இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் சார்பில் 2,000 மெட்ரிக் டன் டீசல் வரவழைக்கப்பட்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டதையடுத்து, 12 மணி நேர மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, இன்று 10 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

பொருளாதார பற்றாக்குறை காரணமாக அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், இலங்கையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. 

10 மணி நேர மின்வெட்டானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் என பகுதிகள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என இரண்டு பிரிவுகளாகப் பிரித்தும் மின்வெட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் வெட்டு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பெரிய அளவில் வணிக நடவடிக்கைகள் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்களும் வணிகமும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மின்வெட்டு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வணிகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.