
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா், குல்காம் மாவட்டங்களில் 2 பயங்கரவாதிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குல்காமில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த யாமின் யூஷஃப் பட் என்ற பயங்கரவாதியை கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள், 51 தோட்டாக்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குல்காம் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதேபோல ஸ்ரீநகரின் நெளகாம் அருகே பட்காம் பகுதியில் ஷேக் ஷாஹித் குல்சாா் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஸ்ரீநகா் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.