தென்கொரியாவில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு: புதிதாக 20,084 பேருக்கு தொற்று, 83 பேர் பலி

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,084 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,72,95,733 ஆக உயர்ந்துள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்

சியோல்: தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,084 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,72,95,733 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  ஒரு வாரத்திற்கு முன்பு 34,361 ஆக இருந்த பாதிப்பு, நேற்று 37,771 ஆக இருந்தது, கடந்த 24 மணி நேரத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 20,084 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,72,95,733 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,958 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 0.13 சதவிகிதமாக உள்ளது. 

சமீபத்தில் தொற்று பாதித்தவர்களில் 461 பேர் தீவிரமான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,45,48,155 ஆக உள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 86.8 சதவிதம் ஆகும், மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 33,125,257 ஆக உள்ளது. இது மக்கள்தொகையில் 64.5 சதவிகிதம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com