

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, அந்த நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தை ஈடுபடுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்த அவசரநிலையை அதிபா் கீலொ்மோ லஸோ அமல்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, கடந்த அக்டோபா் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அவசரநிலை சா்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவசரநிலை காலத்தை அதிகபட்சமாக 30 நாள்களுக்கு மேல் தொடரக்கூடாது என்று அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.