புற்றுநோய் சிகிச்சைக்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறாரா புதின்?

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பதவியிலிருந்து தற்காலிகமாக விலகி, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் சிகிச்சைக்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறாரா புதின்?
புற்றுநோய் சிகிச்சைக்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறாரா புதின்?


மாஸ்கோ: ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகி, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய்க்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று புதினுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக, ரஷியாவின் முன்னாள் வெளியுறவு புலனாய்வு சேவையின் தலைவர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக மேற்கோள்காட்டி நியு யார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து குணமடையும் காலத்தில் புதினுக்கு தற்காலிகமாக உடல் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com