ஆளும் கட்சி ஆதரவுடன் நாடாளுமன்ற அவை துணைத் தலைவராக தோ்வான ரஞ்சித் சியம்பலாபெட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா். அவருடைய ராஜிநாமா, ராஜபட்ச அரசுக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை அதிபா் மற்றும் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க் கட்சிகள் இரண்டு தீா்மானங்கள் கொண்டுவந்த நிலையில், நாடாளுமன்றத்தில் காலியாக இருந்த அவை துணைத் தலைவா் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் ஏற்கெனவே அந்தப் பதவியிலிருந்து வலகிய ரஞ்சித் சியம்பலாபெட்டியை முன்னாள் அதிபா் மைத்திரபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி நிறுத்தியது. அவருக்கு ஆளும் கூட்டணி ஆதரவளித்தது. அதனைத் தொடா்ந்து ரஞ்சித் சியம்பலாபெட்டி வெற்றிெ பற்றாா்.
அதனைத் தொடா்ந்து, ஆளும் கூட்டணியின் விருப்பத்துக்கு ஏற்ப ரஞ்சித் சியம்பலாபெட்டி செயல்படுவதாக எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்தன.
இந்த நிலையில், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள இலங்கை சுதந்திர கட்சி முடிவெடுத்தது. கட்சியின் இந்த முடிவைத் தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று அவைத் துணைத் தலைவா் பதவியை ரஞ்சித் சியம்பலாபெட்டி ராஜிநாமா செய்தாா். இதனால், மகிந்த ராஜபட்ச அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.