
மோசமான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் உதவியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையையடுத்து பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டாா்.
இதையடுத்து, மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்கு உதவிய இந்தியாவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் பதவியேற்ற நிலையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'மக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் வழங்குவதற்காக இந்த பொருளாதார நெருக்கடி பிரச்னையை தீர்க்க விரும்புகிறேன்.
1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நான் செய்ய வேண்டிய வேலையை கண்டிப்பாக செய்வேன்".
அதிபர் கோத்தயபய ராஜபட்சவின் அலுவலகத்திற்கு அருகே கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அது தொடர்ந்து அனுமதிக்கப்படும். போராட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவேன்' என்றும் பேசியுள்ளார்.
இதையும் படிக்க | இலங்கை புதிய பிரதமா் ரணில் விக்ரமசிங்க
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...